Thursday, February 20, 2014

பாலர் பாடசாலையும் ஆரம்ப பாடசாலையும்..

எங்க சிவன் கோவில் அருகினில் சிவா பாலர் பாடசாலை என்று ஒன்று இருந்திச்சு....அதுலான் நம்மட படிப்பு ஆரம்பம் ஆச்சு....கலா டீச்சர் என்று நினைக்கன்....ரொம்ப விருப்பம் நம்மளோட......நமக்கும் படிப்பு ரொம்ப பிடிக்கும்.....so  இப்பிடி போகுது......விளையாட்டு போட்டி ,பாட்டு,படிப்பு என்று போகுது.....பிறகு தரம் 1.....

அப்பா புதுசா தொடங்கின ஒரு school  ல சேர்த்து விட்டாரு.....பாருங்க அந்த school  ஓலை குடிலில தான் நடந்து வந்திச்சு....சரியா நாங்க போற time  கட்டிடம் எல்லாம் கட்டி புது building  ல தொடங்கிச்சு.......


அந்த ஸ்கூல்ல நிறைய friends ...நம்ம தம்பி வேற (ஒரே வயசு தான்) என்னோட வந்துட்டான்......

படிப்பு எண்டா நமக்கு ரொம்ப இஸ்டம் எண்டதால படிப்பு தான்....வீட்ட நம்ம மட்டும் தான் படிக்கிற....தங்கச்சி நல்ல செல்லம்.....அப்போ power  வேற இல்ல விளக்கு தான்........இந்த பிரச்சனை வேற.....நாம சின்ன புள்ளைகள் தானே ஒன்றுமே தெரியாது........

இப்பிடி போகுது......

சின்ன வயதில் நடந்ததாக கூறி அறிந்தவை....

மூத்த பிள்ளை என்ற காரணத்தினாலோ என்னமோ எல்லோரும் விருப்பத்துடன் இருந்ததாக  கூறி கேள்வி பட்டேன்......
அப்பாக்கு கூட வேலை கிடைக்கலையாம்...தறி அடிச்சு தானாம் வாழ்கை போனதாம்.....

அதுக்கிடையில எனக்கு ஏதோ வருத்தமாம்....அம்மம்மா இப்போ கூட சொல்லுறவ......"செத்துடா என்று தாண்டா நினைச்சன் பிரசாத்"...உடனே பிள்ளையாரட ஏதோ கும்புட்டுது போனதாம்......தப்பிதனாம்.....

அப்போ ஒரு மாதிரியா எமனையே ஜெயிசிருக்கம் அந்த அறியாத வயசிலயே.......

அப்புறம் எனக்கு 2 வயசு முடிஞ்சப்ப தங்கச்சி ஒன்று பிறந்திச்சு....எனக்கு அப்போ ஒன்றும் தெரியாது தானே....

ஆனால் அதுக்கப்புறம் ஒரு நாள் கூட அவள பிரிஞ்சது இல்ல.....இப்போ தான் கொஞ்ச நாளா ஒருத்தருமே இல்லாத feeling ... சின்ன பிள்ளைகளாகவே இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்ல.....


அப்போ தான் அப்பாக்கு வேலை கிடைச்சிது.....ரொம்ப சந்தோசம்.....அப்பா ஒரு புது bicycle வாங்கின ....1995 இருக்கும்.....என்னையும் தங்கச்சியையும் சைக்கிள்ல கொண்டு திரிவாரு.......

அப்போ எங்க வீட்ட கோழி வளர்த்தம்...அதோட கடையும் வைச்சு இருந்தம்......

என்ன விட அப்பாக்கு தங்கச்சிய தான் புடிக்கும் போல....என்ன தூக்குறதும் இல்ல.....அம்மா என்ன விட்டு போக மாட்டாவு....நானும் அம்மா இல்லாம இருக்க மாட்டன்.....இப்படி சந்தோசமாக சிறு வயசு போகுது.....அம்மா அப்பா நான் தங்கச்சி.....நான் இவங்கள விட்டு ஒரு இடமுமே போவதும்  இல்ல......

அப்புறம் அப்பா எனக்கொரு சின்ன சைக்கிள் வாங்கி தந்தாரு....ஒவ்வொரு நாளும் அப்பா வேலை விட்டு வரும் வரைக்கும் பார்த்துடு இருந்து வந்த உடனே சைக்கிள் பழகுற........சந்தோஷமான தருணங்கள்.....தங்கச்சி பார்த்துடு நிற்கும்.......வாவ்.....என் வாழ்கையில நடந்த சந்தோஷமான நேரங்கள்........

Wednesday, February 19, 2014

என் பிறப்பு.....

அன்றொரு நாள் என் தாய் பட்ட வலியில் நான் பிறந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.....

என் தந்தையோ பெரிய சாதனை படைத்தது போல பெருமையாக இருந்திருப்பார்....

என் அம்மம்மா தனது மூத்த பேரனுக்காக காத்து கொண்டு இருந்திருப்பார்

என் சித்தி ,மாமா எல்லாம் எனக்காக காத்து கொண்டு இருந்திருப்பார்கள்....

அப்போது தான் சரியாக புரட்டாதி மாதம் 6 ஆந் திகதி சரியாக 6.21 இற்கு இந்த உலகத்தில பிறந்தனாம் என்று அம்மா சொன்னாவு......

எவ்வளவு சந்தோஷ பட்டு இருப்பாங்க.....இப்போ என்னால உணர முடியிது.......

இந்த உலகத்திலே எது மிக பெரிய கொடை என்றால் நம்ம அப்பா அம்மா தருகிற ஊனம் இல்லாத உடலும் உள்ளமும் தான்...
சந்தோஷ படுறன்  எனக்கு அது கிடைச்சிருக்கு........


நன்றி ஆயிரம் என் தந்தைக்கும் தாய்க்கும்............